வாச்சாத்தி வழக்கில் வனத்துறை அதிகாரிகளுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வாச்சாத்தி வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் எல்.நாதன், பாலாஜி, ஹரிகிருஷ்ணன், எத்திராஜ், ராமசாமி, சுப்ரமணியன் மற்றும் கந்தசாமி ஆகியோர் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி, வனத்துறை அதிகாரியான எல்.நாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் சரணடைந்து சிறையில் உள்ளனர். மீதமுள்ள அனைவருக்கும் சரணடைய கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘ இந்த வழக்கு விவகாரத்தில் முன்னதாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சரணடைந்து சிறையில் இருக்கும் குற்றவாளியான வனத்துறை அதிகாரி எல்.நாதன் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மீதமுள்ள குற்றவாளிகள் அனைவருக்கும் அடுத்த விசாரணை தேதி வரையில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கு குறித்து சிபி.ஐ பதிலளிக்கவும் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணை தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

Related posts

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்