ஆயுஷ்மான் பவ பிரசார இயக்கம் வருகிற 13ம் தேதி துவக்கம்

புதுடெல்லி: ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைத்து கேபினெட் அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,” இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே இந்தியாவின் இலக்கான உலகளாவிய சுகாதார அணுகல் சாத்தியமாகும். அரசின் பல்வேறு சுகாதார திட்டங்களின் பலன்கள் பயனாளிகளை சென்றடையும் வகையில் கிராம அளவிலான பிரசாரம் இயக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆயுஷ்மான் பவ பிரசாரத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகின்ற 13ம் தேதி தொடங்கி வைக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு