ஆயுத பூஜையையொட்டி சிங்கம்புணரியில் பொரி தயாரிப்பு தீவிரம்: தனி மவுசு கொண்ட பொரிக்கு புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை..!!

சிவகங்கை: ஆயுத பூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரிசி பொரி உற்பத்தி தீவிரமாக நடைபெறுகிறது. சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் பொரிக்கு தென் மாவட்டங்களில் தனி மவுஸ் உண்டு. பாரம்பரிய முறைப்படி 2% உப்பு, 1% சக்கரை என்று அடிப்படையில் ஒரு வாரம் பதப்படுத்தப்பட்ட அரிசியில் சரியான பக்குவத்தோடு பொரி தயாரிக்கப்படுகிறது. 245 டிகிரி செல்சியஸ் வெப்ப உலையில் 4 முறை வறுத்து மொறுமொறுப்பான சுவையான பொரியை தொழிலாளர்கள் தயாரிக்கின்றனர்.

ஆயுத பூஜைக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் இரவு, பகலாக பொரி தயாரிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆயுத பூஜை வழிபாட்டில் பொரி முக்கிய இடம் பிடிக்கும். இதை கருத்தில் கொண்டு கடந்த 10 நாட்களாக சிங்கம்புணரியில் தினமும் ஒரு டன் அரிசியை பொரியாக தயாரித்து வருகின்றனர். இங்கு தயாரிக்கும் பொரி தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தனி சிறப்பு மிக்க சிங்கம்புணரி அரிசி பொரிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

Related posts

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து