சீக்கியர்கள் மீது தாக்குதல் பாக். தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்

புதுடெல்லி: பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அங்கு வசிக்கும் சீக்கியர்கள் மீது 4 இடங்களில் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல்களை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் தூதருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சீக்கிய சமூகத்தின் மீதான இந்த வன்முறைத் தாக்குதல்களை நேர்மையுடன் விசாரிக்கவும், விசாரணை அறிக்கைகளைப் பகிரவும் பாகிஸ்தான் அதிகாரிகளை இந்தியா கோரியுள்ளது.மத துன்புறுத்தலுக்கு பயந்து வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு