பெண் போலீசிடம் அத்துமீறல்: 2 பெயின்டர்கள் அதிரடி கைது


நாகர்கோவில்: நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழா நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி போக்குவரத்து சரி செய்யும் பணியில் புதுக்கடை காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் ஒருவழி பாதையில் செல்ல முயன்றனர். உடனே அவர்களை திரும்பி செல்லுமாறு பெண் போலீஸ் கூறினார். ஆனால் பைக்கில் இருந்தவர்கள் திரும்பி செல்லாமல் அவரிடம் தகராறு செய்ததுடன், தவறான எண்ணத்தில் அவரது முதுகில் தட்டி அத்து மீறி உள்ளனர்.

இதனால் பெண் போலீஸ் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதையடுத்து அந்த வாலிபர்கள் 2 பேரும் பைக்கில் வேகமாக தப்பி செல்ல முயன்றனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து, கோட்டாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த பிரதீஸ் (30), நெய்யூர் பகுதியை சேர்ந்த ஆன்றோ பிராங்கிளின் (29) என்பதும், 2 பேரும் பெயின்டிங் வேலை செய்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related posts

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 19 ரயில்கள் ரத்து

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

சென்னை விமானநிலையத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பு நடவடிக்கை