அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் 6 பேர் மீது தூப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் படுகாயம்..!!

திஸ்பூர்: அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் 6 பேர் மீது தூப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தெற்கு மணிப்பூரில் உள்ள இந்திய-மியான்மர் எல்லைக்கு அருகே அசாம் ரைபிள் படை வீரர் ஒருவர் சக வீரர்கள் 6 பேரை துப்பாக்கியால் சுட்டு விட்டு, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 6 படை வீரர்களும் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மணிப்பூர் போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கும் மாநிலத்தில் நடந்து வரும் மோதலுக்கும் தொடர்பு இல்லை என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட அசாம் ரைபிள் படை வீரர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள சுராசந்திபூரில் வசிப்பவர் என கூறப்படுகிறது. தற்போது வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நோக்கம் தெளிவாக தெரியவில்லை. இது குறித்து அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஒடிசா, ஆந்திரா மாநில முதலமைச்சர்கள் இன்று பதவியேற்பு

தேர்தல் தோல்வி, தமிழ்நாடு பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்: அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்

பெண் காவலரிடம் தகராறு செய்தவர் கைது