ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல்கள்!!

சென்னை : ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. தான் நடிக்கவுள்ள திரைப்படத்துக்காக தயாரிப்பாளர் ரூசோவிடம் பணம் பெற்றதாக ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆருத்ரா மோசடி வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் தயாரிப்பாளர் ரூசோ. வங்கி கணக்கு மூலமாகவும் ரொக்கமாகவும் ரூசோவிடம் கோடிக்கணக்கில் ஆர்.கே.சுரேஷ் பணம் பெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ரூசோவிடம் பெற்ற பணத்தை திரைப்படத்துக்கு மட்டுமல்லாமல் சொந்த செலவுக்கும் ஆர்.கே.சுரேஷ் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆர்.கே.சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை டிச.18-ல் போலீசார் நீதிமன்றத்தில் அளிக்க உள்ளனர்.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு