என்னை கைது செய்தது அரசியல் பலி வாங்கும் நடவடிக்கை; சட்டப்படி வழக்கு விசாரணையை சந்திப்பேன்.! சந்திரபாபு நாயுடு பேட்டி

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். நந்தியாலாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு ஆர்.கே. நகரில் உள்ள விழா அரங்கில் தங்கி இருந்தபோது நிதி மோசடி தொடர்பான வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எவ்வாறு கைது செய்வீர்கள் என்று சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கு பதிவுகள் மற்றும் எஃப் ஐ ஆர் நகல்களை காண்பிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.

ரிமாண்ட் ரிப்போர்ட்டை கொடுக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களை கைது செய்த போலீசார் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவையும் கைது செய்து விஜயவாடாவுக்கு அழைத்து சென்றனர். இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் திருப்பதியில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு தேச கட்சியினர் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, என்னை கைது செய்தது அரசியல் பலி வாங்கும் நடவடிக்கை . வழக்கை திசை திருப்புகின்றனர் . சட்டப்படி வழக்கு விசாரணையை சந்திப்பேன். என் மீது சுமத்தப்பட்ட ஊழலில் உண்மையில்லை; கட்சியினர் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Related posts

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி

சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை