ஆரியம் திராவிடம் வரலாறு குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதது ஏன் என்று தெரியவில்லை: அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: ஆரியம் திராவிடம் வரலாறு குறித்து படித்தவர்களுக்கு மட்டும் இன்றி படிக்காதவர்களுக்கும் நன்கு தெரியும், அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தி வரும் அவருக்கு தெரியாதது ஏன் என்று தெரியவில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; ” ஆரியம் திராவிடம் வரலாறு குறித்து இப்பொழுதுள்ள இளைய மாணவர்களுக்கே தெரியும், படித்தவர்களுக்கு மட்டும் இன்றி படிக்காதவர்களுக்கும் நன்கு தெரியும், அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தி வரும் அவருக்கு தெரியாதது ஏன் என்று தெரியவில்லை, இனிமேலாவது அவர் தெரிந்து கொள்ள வேண்டும் இது வெட்கக்கேடு, இது கண்டனம் அவர் எப்படி அந்த இயக்கத்துக்கு வந்தார் எனவே தெரியவில்லை, இனிமேலாவது தெரிந்து கொள்ள வேண்டும் .ஆரியம் திராவிடம் பற்றி ஆராய்ச்சி பண்ண வேண்டிய அவசியம் கிடையாது” என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு