அரியானா கலவரத்துக்கு காரணமான பஜ்ரங் தள் உறுப்பினர் மோனு மானேசர் கைது

குருகிராம்: அரியானாவில் கடந்த ஜூலை 31ம் தேதி விஎச்பி. அமைப்பினர் நடத்திய பேரணியை தடுத்து நிறுத்த முயன்றதில் கலவரம் ஏற்பட்டது. இதில் நூஹ் மற்றும் குருகிராமில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறையை தூண்டியதாக பசு பாதுகாவலரும் பஜ்ரங் தள் உறுப்பினர் மொகித் யாதவ் எனப்படும் மோனு மானேசர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், மானேசரை குருகிராம் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று இருப்பதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் சீருடையில் இல்லாத காவலர்கள் அவரை அழைத்து செல்லும் வீடியோ உள்நோக்கத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அரியானா போலீசார் அவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்பதை உறுதிபடுத்தவில்லை.

Related posts

ஒருபுறம் மோடி பதவியேற்பு விழா..! மறுபுறம் ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு என தகவல்

பீகார், ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிவால் போராட்டம்; 1,563 தேர்வருக்கு வழங்கிய கருணை மதிப்பெண் செல்லுமா?.. உயர்நிலை குழு விசாரணை தொடங்கியது; தேர்வு ரத்தாகுமா?

காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாத தாக்குதல்: 10 பேர் பலி