வில்லுப்பாட்டு, நாட்டுப்புற கலைகளுடன் கேரளத்தை கவர்ந்த தமிழ் கலை விழா: பள்ளி மாணவ, மாணவியர் அசத்தல்

மூணாறு: கட்டப்பனையில் அம்மாநில பொதுக்கல்வித்துறை சார்பில் நடந்த தமிழ்க் கலை விழா அனைவரையும் கவர்ந்தது. இதில், கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர் வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாட்டு பாடி அசத்தினர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளியில், மாவட்ட அளவிலான பள்ளி கலை நிகழ்ச்சிகள் டிசம்பர் 5ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. கேரள மாநில பொதுக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், நேற்று (டிச.7) மாவட்ட அளவிலான தமிழ் மொழி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை விழா நடத்தப்பட்டது. இடுக்கி உபமாவட்ட பள்ளி கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழர்களின் நாட்டுபுறப் பாட்டு, வில்லுப்பாட்டு, நாடகம், தெருக்கூத்து ஆகியவை பார்வையாளர்களின் இதயம் வெகுவாக கவர்ந்தது. பேச்சுப் போட்டி, நாடகம் ஆகியவற்றில் பங்கெடுத்த மாணவ, மாணவியர் கேரளா-தமிழ்நாடு எல்லைப் பகுதியில் நடக்கும் குழந்தை திருமணம், மூணாறில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நிலை, போதைப் பொருள் உபயோகம், சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை எடுத்து கூறும் வகையில் அமைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பீர்மேடு வஞ்சிவயல் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வில்லுப்பாட்டு மூலம் பிளாஸ்டிக்கால் சமூகத்தில் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறினர். இதில் பங்கேற்ற பார்வையாளர்கள் தமிழ் கலை விழா அனைவரையும் கவர்ந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related posts

மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மக்களவை தேர்தலில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது