மருத்துவம் சார்ந்த படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: 2023-24ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளிட்டுள்ள செய்தி குறிப்பு: 2023-2024ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு (பாராமெடிக்கல்) அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்திற்கான பதிவு இன்று முதல் தொடங்கி வரும் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து