மேல்முறையீடு செய்த 9 லட்சம் பேரில் தகுதியானோருக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் வழங்கப்படும்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். சில இடங்களில் தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விடுபட்டு இருக்கிறது என மார்க்சிஸ்ட் உறுப்பினர் நாகை மாலி தெரிவித்தார். இதுகுறித்து பேசிய முதலமைச்சர், மேல்முறையீடு செய்த 9 லட்சம் பேரில் தகுதியானோருக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் வழங்கப்படும். எவ்வளவு பெண்கள் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தாலும் பரிசீலித்து வழங்கப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்று உறுதி அளித்தார்.

Related posts

கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெருமிதம்..!!

கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்: உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53,320க்கு விற்பனை