அண்ணா சிலை அவமதிப்பு

திருவெறும்பூர்: திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிர் புறம் அண்ணாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அவ்வழியே வந்தவர்கள் அண்ணா சிலையில் நெற்றி பகுதியில் குங்கும பொட்டு வைத்ததோடு, அந்த குங்குமத்தை அவரது சிலை மீது பூசி இருந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றிய தகவலறிந்த அப்பகுதி திமுகவினர் சிலை முன்பு திரண்டு, குங்குமத்தை பூசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் ஈடுபட்டனர். தகவலறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்க வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக சிலை மீது இருந்த மற்றும் குங்கும சாயத்தை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து மாலை அணிவித்து சிலைக்கு பூட்டு போடப்பட்டது. இதுதொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அருகில் உள்ள கோயிலில் இருந்து குங்குமத்தை எடுத்து வந்து சிலை மீது பூசி இருக்கலாம் என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சென்னை விமானநிலையத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பு நடவடிக்கை

சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

குதிரை ஏற்றம் பயிற்சி மையத்தில் டாக்டர் மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்: உரிமையாளர், பயிற்சியாளர் கைது