13 வயதுகூட ஆகாததால் நடவடிக்கை: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் திடீர் முடக்கம்..!

டெல்லி: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். கட்டணத்தை கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என்ற அம்சத்தை கொண்டு வந்தார். மாத சந்தா கட்டாதவர்களின் ப்ளூ டிக் பறிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் கணக்கில் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது. ஏஎன்ஐ ட்விட்டர் கணக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் முடக்கியதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஏஎன்ஐ ட்விட்டர் கணக்கை தொடங்கியவரின் வயது 13க்கும் கீழ் இருந்ததாக காரணம் கூறி ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ்; ஏஎன்ஐயைப் பின்தொடர்பவர்களுக்கு மோசமான செய்தி. 7.6 மில்லியன் பயனர்களால் பின்தொடரப்படும் இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனத்தின் பக்கத்தை முடக்கிவிட்டு, ட்விட்டர் இந்த மெயிலை அனுப்பியுள்ளது.

ஏஎன்ஐ 13 வயதுக்குட்பட்ட நபர் அல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டதால் ட்விட்டர் நிறுவன விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்த மெயலில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கணக்கு முடக்கப்பட்டு ட்விட்டரில் இருந்து ஏஎன்ஐ பக்கம் நீக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி ஒரு ஸ்கிரீன் ஷாட்டை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்