ஆந்திர போலீஸ் ஜீப்பை திருடி வந்த வாலிபர்

வந்தவாசி: ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து நேற்று பகல் ஹைவே பேட்ரோல் போலீசின் ஜீப்பை வாலிபர் கடத்தி கொண்டு திருவண்ணாமலை மாவட்டம் வழியாக செல்வதாக எஸ்பிக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து செக்போஸ்ட்டில் தீவிர சோதனை நடந்தது. இந்நிலையில், நேற்று மாலை வந்தவாசி பஜார் பகுதியில் டிஎஸ்பி கார்த்திக் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர போலீஸ் ஜீப்பை வாலிபர் வேகமாக ஓட்டி வந்தார். பஜார் வீதியில் போக்குவரத்து நெரிசலாக இருந்ததால் ஜீப் நின்றது. உடனே டிஎஸ்பி கார்த்தி, சினிமா பாணியில் அவரது ஜீப்பில் இருந்து குதித்து இறங்கி ஓடிசென்று ஆந்திரா போலீஸ் ஜீப்பை கடத்தி வந்த வாலிபரை மடக்கினார். விசாரணையில், போலீஸ் ஜீப்பை கடத்தியவர் சித்தூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் சூர்யா (24) என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்