பாலாற்றில் மேலும் தடுப்பணை கட்ட இன்று அடிக்கல் நாட்டுகிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி: தமிழ்நாடு விவசாயிகள் அதிர்ச்சி


விஜயவாடா: குப்பம் பகுதியில் பாலாற்றில் தடுப்பணை கட்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். கர்நாடகாவில் 90 கி.மீ., ஆந்திராவில் 45 கி.மீ, தமிழகத்தில் 225 கி.மீ. பயணிக்கிறது பாலாறு. ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் அங்குள்ள தடுப்பணைகளில் சேமிக்கப்படுவதால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காததால் பாலாற்று நீரை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே ஆந்திரா 22 தடுப்பணைகளை கட்டிய நிலையில் மேலும் ஒரு தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாலாற்றில் மேலும் தடுப்பணை கட்ட ஆந்திரா அடிக்கல் நாட்டுவதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.