ஆந்திர முதல்வரின் பிறந்தநாளையொட்டி கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வந்த நடிகை ரோஜா

திருமலை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான நாகராஜ் சாலை ஓரத்தில் செருப்பு விற்கும் கடை வைத்திருக்கிறார். இவருக்கு இரண்டு கால்களும் போலியோ பாதிக்கப்பட்ட நிலையில், திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவிக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்து படுத்த படுக்கையாய் இருக்கிறார். முதல்வர் ஜெகன் மோகன் பிறந்தநாளான நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து விஜயவாடா வாம்பே காலனியில் உள்ள நாகராஜின் வீட்டுக்கு அமைச்சர் ரோஜா நேற்று சென்றார்.

வந்தது நடிகை ரோஜா என்பது நாகராஜிக்கு தெரியவில்லை. பின்னர் சாண்டா கிளாஸாக வந்தது அமைச்சர் ரோஜா என்பதை தெரிந்து கொண்ட அவர் என்ன செய்வது என்று தெரியாமல் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளார். பின்னர் நாகராஜுன் குடும்பத்துடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரோஜா, அவரின் பெண் குழந்தைகளுக்கு புத்தாடை, பரிசுகளை வழங்கினார். அதோடு குழந்தைகளின் படிப்புக்காக ₹2 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.

Related posts

சென்னை – ஹவுரா சூப்பர் பாஸ்ட் மெயில் சம்பவம் பரிதாபமான நிலையில் ரயில் சேவை: தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்

2024 ஜன. முதல் ஏப். வரை 10.14 கோடி சுற்றுலா பயணிகள் வருகை: அமைச்சர் தகவல்

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்: துணை முதல்வரானார் நடிகர் பவன்கல்யாண்: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு