ஆந்திராவில் வினோதம் ரதி மன்மதன் கோயிலில் பெண் வேடமிட்டு வழிபாடு செய்யும் இளைஞர்கள்: ‘குடும்ப நலம், ஆரோக்கியம் கிடைக்கும்’

திருமலை: ஆந்திராவில் உள்ள ரதி மன்மதன் கோயிலில் ஆண்டுக்கு ஒரு வாரம் பெண் வேடமிட்டு வாலிபர்கள் வழிபாடு நடத்தும் வினோத நிகழ்வு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சந்தேகுளூர் கிராமத்தில் ரதி-மன்மதன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகையின்போது ஒரு வாரத்திற்கு வினோத வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதாவது பெண் வேடமிட்டு ஆண்கள் பலர் இக்ேகாயிலுக்கு வந்து வழிபாடு செய்வார்கள். பல ஆண்டுகளாக வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ரதி மன்மதன் கோயிலுக்கு பெண் வேடமிட்டு வந்த இளைஞர்கள் கூறுகையில், `ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகையின்போது ஒருவர் மீது ஒருவர் வண்ணபொடிகளை தூவி கொண்டாடுவார்கள். ஆனால் எங்கள் கிராமத்தில் பெண் வேடமிட்டு ரதி மன்மதனை வணங்கி விருப்பங்களை வேண்டி இளைஞர்கள் பூஜை செய்வர். இதனை நாங்கள் வழக்கமாக கொண்டிருக்கிறோம். இந்த பூஜைகள் மூலம் குடும்ப நலம் செழித்து வியாபாரம் மற்றும் ஆரோக்கியத்தில் நல்ல பலன்கள் கிடைக்கிறது. இதனால்தான் எங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் அறிவுரைப்படி இப்பூஜைகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இக்கோயிலில் பெண் வேடமிட்டு ரதி மன்மதனை வணங்கினால் தீராத நோய் குணமாகும் என்பது எங்கள் நம்பிக்ைக. இதற்கு முன்பு வரை சுற்றுவட்டார பகுதிகளுக்கு மட்டுமே இந்த பூஜை தெரிந்திருந்தது. ஆனால் சமூக வளைதலங்கள் வளர்ச்சியின் காரணமாக தற்போது இங்கு நடைபெறும் பூஜைகளை புகைப்படம் எடுத்து பலர் வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதால் தற்போது ரதி மன்மதன் கோயில் குறித்தும், இங்கு நடக்கும் வினோத வழிபாடு குறித்தும் வெளியுலகத்திற்கு தெரிய தொடங்கியுள்ளது’ என தெரிவித்தனர்.

Related posts

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு

மது அருந்தியது, கஞ்சா புகைத்தது, சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை: 3 பேர் கைது; திருவான்மியூரில் பயங்கரம்

நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ளை லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கும் ேமல் நகை தப்பியது: தாம்பரத்தில் பரபரப்பு : மர்ம நபர்களுக்கு வலை