எங்களை தலைகீழாக தொங்கவிடுவாரா? அமித்ஷா மீண்டும் சிக்குவார்: லாலுபிரசாத் விமர்சனம்


பாட்னா: எங்களை தலைகீழாக தொங்கவிடுவேன் என்ற அமித்ஷா மீண்டும் சிக்குவார்என்று லாலுபிரசாத் தெரிவித்தார். பீகார் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சரமாரியாக விமர்சனம் செய்தார். மேலும் தலைகீழாக தொங்கவிட்டு அவர்களை நேராக்குவோம் என்று அமித்ஷா சபதம் செய்தார். இதுகுறித்து நேற்று லாலுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,’ அமித்ஷா அப்போது லிப்டுக்குள் சிக்கவில்லையா? அதுபோல் இப்போதும் அமித்ஷா சிக்குவார்’ என்று கேலி செய்தார். 2015ம் ஆண்டு பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட வந்த அமித்ஷா அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள லிப்டிற்குள் அரை மணி நேரம் சிக்கிக்கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை குறிவைத்து அவர் அமித்ஷாவை கேலி செய்தார்.

Related posts

மகாராஷ்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி

10 ஆண்டு ஆட்சியில் இருந்தும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் போன பிஆர்எஸ் கட்சி

மோடியின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி