அமெரிக்காவில் 60 வயதை கடந்த 101 ஸ்கை-டைவர்கள் வானிலிருந்து ஒரே நேரத்தில் குதித்து உலக சாதனை..!!

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த 101 ஸ்கை-டைவர்கள் வானிலிருந்து ஒரே நேரத்தில் குதித்து உலக சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங் போட்டியில் 60 வயதுக்கு மேல் உள்ள 100-க்கு மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்று உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன் தனி சிறப்பே ஸ்கை-டைவர்கள் அத்தனை பேரும் 60 வயதை கடந்தவர்கள். உலக சாதனை படைப்பதற்காக தனி குழு அமைத்து அதற்கு ஸ்கை-டைவர்ஸ் ஓவர் சிக்ஸ்டி என பெயரிடப்பட்டது. இந்த குழு தங்களது 4-வது முயற்சியில் ஒன்றாக குதித்து 2 உலக சாதனைகளை முறியடித்துள்ளனர். இந்நிலையில், பயிற்சியை ஏற்பாடு செய்த அமைப்பின் படி, 101 முதியவர்கள் தங்களின் நான்காவது முயற்சியில் வெற்றிகரமாக ஒரு ஸ்னோஃப்ளேக் உருவாக்கத்தை உருவாக்கினர்.

இந்த குழு ஏற்கனவே இரண்டு உலக சாதனைகை படைத்துள்ளது. முதலில் கடந்த 2017ம் ஆண்டு 60 பேரை கொண்டு பெர்ரீசில் ஸ்கை டைவிக் செய்து உலக சாதனை படைத்தது. இதையடுத்து, 2018ம் ஆண்டு சிக்காகோவில் 75 பேரை கொண்டு முந்தைய சாதனையை முறியடித்து ஸ்கை டைவிங் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த இரண்டு சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் கடந்த 15ம் தேதி 101 முதியவர்களை கொண்டு ஸ்கை டைவிக் செய்தது. இவர்கள் அனைவரும் 60 வயது முதல் 78 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

Related posts

பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி; தலைமை ஆசிரியர்களுக்கு சீர்மிகு பாராட்டு விழா: சென்னையில் நடக்கிறது

உடற்கல்வி இயக்குனர், போக்குவரத்து கழக உதவி மேலாளர் உள்பட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் 118 காலி பணியிடங்கள்: அடுத்த மாதம் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தங்கம் மீண்டும் ₹54 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் சவரன் ₹560 எகிறியது