அமெரிக்கா சென்று எடப்பாடி என்ன கொண்டு வந்தார்?

திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: முதல்வராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி, தனது அமைச்சர்களுடன் அமெரிக்கா சென்றார். ஆனால் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தற்போது நமது முதல்வர் சிங்கப்பூர் பயணம் செல்லும் போது தொழில்துறையை சேர்ந்த அதிகாரிகளை உடன் அழைத்து சென்றுள்ளார். தமிழ்நாட்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை ஏற்கனவே கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார். முதல்வரின் இந்த சிங்கப்பூர் பயணம், தமிழகத்தில் பல்வேறு தொழில் திட்டங்களை நிச்சயம் கொண்டு வரும். என்ன செய்தாலும் குறை மட்டுமே கூறுபவர்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். முதல்வரின் சுற்றுப்பயணம் குறித்து கிண்டல் செய்வது, குறை கூறுவது தவறு. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு திமுக மட்டும் அல்ல. தோழமை கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். நிச்சயம் கலந்து கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!

வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அரசு வாகனத்தில் அனுப்பி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கபில்சிபல்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து