அமர்நாத் யாத்திரை நிறைவு 4.4 லட்சம் பேர் தரிசனம்

ஸ்ரீநகர்: பனிலிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. இதில் பல்தால் மற்றும் பாகல்கம் ஆகிய இரண்டு பாதைகள் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. பனிலிங்க தரிசனத்துக்கான அமர்நாத் யாத்திரையில் கடந்த ஆண்டு 3.65 லட்சம் பேர் தரிசித்திருந்த நிலையில், இந்தாண்டு 4,45,338 பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தாண்டு யாத்திரையின் போது, இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை தொடர்பான அசம்பாவிதங்களால் 48 பக்தர்கள் மற்றும் சேவை பிரிவினர்கள் உயிரிழந்ததாகவும் 62 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்