கர்நாடக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: முதல்வர் சித்தராமையாவுக்கு நிதித்துறை, டி.கே.சிவகுமாருக்கு நீர்வளத்துறை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்று 20ம் தேதி முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் உள்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதை தொடர்ந்து கடந்த 27ம் தேதி இரண்டாவது கட்ட அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. இதில் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கான துறைகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளன.

அதைத்தொடர்ந்து புதிய அரசாணையை அரசு நேற்று வெளியிட்டது. அதில் முதல்வர் சித்தராமையா தனது வசம் நிதி, தகவல் மற்றும் உயிரியல், உளவுத்துறை மக்கள் தொடர்பு ஆகியவற்றை வைத்துள்ளார். துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனம், பெங்களூரு மாநகர மேம்பாடு, மாநகராட்சி, ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தினேஷ்குண்டுராவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையும், பரமேஸ்வருக்கு உள்துறையும், ராமலிங்கரெட்டிக்கு போக்குவரத்து துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின் அனிமேஷன் காணொலி: காணொலியை நீக்க வலியுறுத்தி ஏராளமான பயனர்கள் புகார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6ல் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு