மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பாஜக எம்.எல்.ஏ. உட்பட 3 பேர் கைது

மும்பை: மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டை பாஜக எம்.எல்.ஏ. கணபதி கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட்டை பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மகேஷ் கெய்க்வாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்நிலையத்தில் பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு

அல்காஸ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அறைக்குள் நடத்த பேச்சின்போதே பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு. பாஜக எம்.எல்.ஏ. சுட்டதில் படுகாயமடைந்த முன்னாள் கவுன்சிலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட பாஜக

பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட் – ஷிண்டே பிரிவு சிவசேனா முன்னாள் கவுன்சிலர் மகேஷ் இடையே பிரச்சனை இருந்தது. மராட்டிய முதலமைச்சர் ஷிண்டே கட்சி நிர்வாகியை கூட்டணி கட்சியான பாஜக எம்.எல்.ஏ.சுட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்