அதிமுக மாஜி அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை: ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில்..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ், பொதுவிநியோக திட்ட பொருட்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. ரூ.350 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரில் நடவடிக்கை கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு தொடர்ந்திருந்தார். 2015-2021 வரையிலான டெண்டர் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்