அதிமுக உடையவும் இல்லை, சிதறவும் இல்லை கட்டுக்கோப்பாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: அதிமுக உடையவும் இல்லை, சிதறவும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரையில் ஆக.20-ல் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை பழனிசாமி வெளியிட்டார். பின்னர் உரையாற்றிய அவர்; எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக என்ற ஆலமரம் தற்போது விரிந்து வளர்ந்துள்ளது. 75 நாட்களில் அதிமுகவில் 1 கோடியே 60 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்; இது வரலாற்று சாதனை.

தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக என்பதில் பெருமை கொள்கிறேன். அதிமுக உடையவுமில்லை, சிதறவுமில்லை கட்டுக்கோப்பாக உள்ளது. அதிமுகவில் இனி வெற்றிடமே இல்லை என நிரூபித்துள்ளோம். அடுத்து வரும் தேர்தலுக்கு அடித்தளமாக மதுரை மாநாடு அமையும். அதிமுக தான் அனைவருக்குமான கட்சி. தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு அதிமுக தான் காரணம். சில மாவட்ட செயலாளர் பதவியிடங்களை நிரப்பாமல் இருப்பது எங்களது உட்கட்சி பிரச்சனை. கட்சியை பலப்படுத்தி வருகிறோம்; மாவட்ட செயலாளர் பதவியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

தேர்தல் நெருங்கும் போது கூட்டணி பற்றி அறிவிப்போம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது; நேரம் வரும்போது கூட்டணி குறித்து தெளிவாக பேசுவோம். தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை சிறப்பாக இருந்தது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் புது நாடகத்தை அரக்கேற்றியுள்ளது.

மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை இருமாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஜூன் மாதத்துக்கான தண்ணீரை திறக்காமல் தமிழ்நாடு விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளது கர்நாடக அரசு. கர்நாடக காங்கிரஸ் அரசின் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் இவ்வாறு கூறினார்.

Related posts

இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை பொதுமக்கள் வழங்கவில்லை: தேர்தல் முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா

பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை