நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளை அதிமுக தொடங்கியது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஓ.எஸ்.மணியன் பங்கேற்றுள்ளனர். செம்மலை, பா.வளர்மதி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றிருக்கின்றனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வைகைச்செல்வன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Related posts

ராயக்கோட்டையில் மந்த கதியில் நடக்கும் பாலம் கட்டுமான பணி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் 17,081 பேர் ஆப்சென்ட்

ஜூன் 15-ல் கோவை கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெறும்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு