அக்னிவீர் திட்டத்தின்கீழ் கடற்படையில் 10ம் வகுப்பு தகுதிக்கு வேலை

இந்திய கடற்படையில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு படித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

திட்டம்: Agniveer (MR 02/2024 BATCH).
சம்பளம்: முதல் வருடம் ரூ.30 ஆயிரம், 2ம் வருடம் ரூ.33 ஆயிரம், 3ம் வருடம் ரூ.36,500, 4ம் வருடம் ரூ.40 ஆயிரம்.
வயது: 1.11.2003க்கும் 30.4.2007க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
உயரம்: ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி: ஆண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 6½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 20 ஸ்குவாட்ஸ், 12 புஷ்அப்கள், 15 சிட்அப்கள் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 15 ஸ்குவாட்ஸ், 10 சிட்அப்கள், 12 புஷ்அப்கள் எடுக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு பாடங்களிலிருந்து ‘ஆப்ஜக்டிவ்’ கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் இதர தேர்வுகள் ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும். எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி பற்றிய முழு விவரம் அட்மிட்கார்டு மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். பணிக்கு ேதர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்திய கடற்படையில் 4 வருடங்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.கடற்படை பயிற்சி நவம்பரில் ஒடிசாவில் உள்ள INS Chilka கடற்படை தளத்தில் தொடங்கும்.
கட்டணம்: ரூ.550/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.agniveernavy.cdac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.5.2024.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!