தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்கு


உளுந்தூர்பேட்டை: அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று த.வெ.க. சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமங்களில் கொடியேற்றுவதற்கு வருவாய்த்துறை, காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்ட த.வெ.க. கொடிக் கம்பங்களை போலீசார் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.

Related posts

நீட்: நாமக்கல் மாணவர்கள் 4 பேர் 720/720 மதிப்பெண்

கன்னியாகுமரியில் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை!!

11.72 லட்சமாம்.. இந்தியாவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்!!