போதையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட காவலர் மண்டை உடைப்பு: வடமாநில தொழிலாளர்கள் மீது வழக்கு

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில், 200க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் ஆயுத பூஜை கொண்டாடிய பிறகு, நள்ளிரவில் மது அருந்தியுள்ளனர். அப்போது, இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், 2 இருசக்கர வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்று, தகராறில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை சமாதானம் செய்து, கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். இதனால், ஆத்திரமடைந்த வடமாநில தொழிலாளர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காவலர் ரகுபதி (50) என்பவரின் மண்டை உடைந்து, இடுப்பு, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் என்ற காவலர் காயமடைந்தார். சக போலீசார் அவர்களை மீட்டு அத்திப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெய கிருஷ்ணன் வழக்கு பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களிடம் விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதயில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதால் பதற்றம்!

ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

சோழவரம் ஏரி கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரையை அப்புறப்படுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை