ரூ.20 ஆயிரம் கோடி வந்தது எப்படி? அதானி நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் இல்லை: வருமான வரித்துறை மீது காங்கிரஸ் புகார்

புதுடெல்லி: அதானி குழுமம் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரீஷியசில் போலி நிறுவனங்களை தொடங்கி, அவற்றின் மூலம் அதன் இந்திய நிறுவனங்களின் பங்குகளை முறைகேடாக உயர்த்தி, கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அதன் ஜனவரி மாத ஆய்வறிக்கையில் கூறியிருந்தது. இந்நிலையில், அதானியுடன் தொடர்புடைய போலி நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், “மொரீஷியசில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் அதானியுடன் தொடர்புடைய இரண்டு போலி நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை வருமான வரித்துறை கடந்த 2014ம் ஆண்டு முதல் கண்காணித்து வந்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், பெயரளவுக்கு 2 நோட்டீஸ்கள் மட்டுமே அனுப்பி உள்ளது. செபியை போல், துடிப்புடன் செயல்படும் வருமான வரித்துறை அமிர்த காலத்தில் வேலையை செய்யாமல் தூங்கி கொண்டிருக்கிறதா? அதானிக்கு கணக்கில் காட்டப்படாத ரூ.20,000 கோடி எங்கிருந்து வந்தது? அந்நிறுவனங்களை பற்றிய உண்மை நிலை என்ன? என்பதை கண்டறிய நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது,” என்று கூறியுள்ளார்.

Related posts

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தொடரும் வெறிநாய்கள் செயல்; வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்; கரூரில் நாய்களிடம் கடிபட்டு உயிரிழந்த புள்ளி மான்!

தமிழ்நாட்டில் நெல்லை, தேனி உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்