நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கேரள ஐகோர்ட் மறுப்பு

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த பிரபல மலையாள நடிகை கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரில் இருந்து காரில் கொச்சிக்கு செல்லும்போது கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு பிரபல முன்னணி மலையாள நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் திலீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டரை மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தவர் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் சாட்சிகளை கலைக்க முயற்சித்ததாக நடிகர் திலீப் மீது குற்றம்சாட்டப்பட்டது. எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

Related posts

மதுரை மாவட்டத்தில் 52 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: மாவட்ட நிர்வாகம் தகவல்

பாஜக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.. பாஜக 200 இடங்களைக் கூட பெற முடியாது: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி

தரைப்பாலத்தை கடக்க முயன்றவர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு: மீட்கச் சென்றவர்களும் பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு