பாஜவுடன் கூட்டணி அமமுக நிர்வாகி விலகல்

பாஜவுடன் அமமுக கூட்டணி அமைத்ததை கண்டித்து, தேனி மாவட்டம், கம்பம் நகர அமமுக துணைச் செயலாளர் சாதிக்ராஜா கட்சியிலிருந்து விலகுவதாக போஸ்டர் அடித்து நகர் முழுவதும் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில், ‘‘நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினரை அழிக்கும் நோக்கத்துடனும் தமிழகத்தை வஞ்சிக்கும் பாசிச வெறி பிடித்த மதவாத கட்சியான பாஜ உடன் அமமுக கூட்டணி வைத்ததால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன்.

மேலும் அமமுக கட்சியில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் சிந்தித்து செயல்படுங்கள்’’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. தேனி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிடிவி.தினகரன் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பம் நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு நிலவியது.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு