பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் குண்டுவெடித்து பலர் காயம்: சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன் என திரிணாமுல் காங். கேள்வி

கொல்கத்தா: பாஜ பிரமுகரின் உறவினரின் வீட்டில் குண்டு வெடிப்பு நடந்தது என்றும் இதில் பலர் காயமடைந்துள்ளனர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில்,பசீர்ஹாட் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட ஹஸ்னாபாத் பஞ்சாயத்தை சேர்ந்த பாஜ பிரமுகர் நிமாய்தாஸ்.இவருடைய உறவினரின் வீட்டில் நேற்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

இதில் வீட்டின் மேற்கூரை பிய்த்து எறியப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். ஆனால், குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி சிபிஐ அல்லது என்எஸ்ஜி எதுவும் விசாரணை நடத்தாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து சிபிஐ,என்எஸ்ஜி ஆகியவை விசாரணை நடத்ததாது ஏன் என கேள்வி எழுப்பினார்.

Related posts

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் தோற்றம்: நாளையும் பொது மக்கள் காணலாம்

தருமபுரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் லேசான மழைக்கு வாய்ப்பு

ஆன்லைனில் ஒரு வாழ்க்கை.. Offline-ல் ஒரு வாழ்க்கை: Gen Z தலைமுறை குறித்த ஆய்வில் தகவல்