ஆந்திராவில் பரபரப்பு: செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கார் ஏற்றி கொலை

அமராவதி: ஆந்திராவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் வழக்கம்போல் நேற்று இரவு ரோந்து சென்றனர். அன்னமய மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலம் குன்றேவாரி பள்ளி சந்திப்பு அருகே வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றனர். ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுப்பதற்காக சென்ற போலீசார் மீது கடத்தல்காரர்கள் கார் ஏற்றி தப்பிச் சென்றனர்.

கடத்தல்கார்கள் காரை ஏற்றியதில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடத்தல்காரர்கள் வந்த கார் வேகமாக மோதிவிட்டு சென்றதில் சிறப்பு அதிரடிப்படை காவலர் பி.கணேஷ் (30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 கடத்தல்காரர்கள் தப்பி ஓடிய நிலையில் இருவரை பிடித்த போலீசார் காரில் இருந்து 7 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு