8 மையங்களில் தட்டச்சு தேர்வு தொடங்கியது

சேலம், பிப். 25:சேலம் மாவட்டத்தில் 8 மையங்களில் நேற்று தொடங்கிய தட்டச்சு தேர்வில், 8,000 பேர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககங்களின் கீழ் 3,500க்கும் மேற்பட்ட தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இங்கு பயிற்சி பெற்றவர்களுக்கான இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வுகள், பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் என ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி பிப்ரவரி தேர்வுகள் நேற்று மாநிலம் முழுவதும் தொடங்கியது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக், கோரிமேடு சிஎஸ்ஐ பாலிடெக்னிக், வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கோட்டை மாரியம்மன் பாலிடெக்னிக், சேலம் பாலிடெக்னிக், கொங்கு பாலிடெக்னிக், காவேரி பாலிடெக்னிக் மற்றும் எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரி என 8 இடங்களில் மையம் அமைக்கப்பட்டிருந்து. இதில், 8 ஆயிரம் பேர் தட்டச்சு தேர்வில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்நாளான நேற்று இளநிலை தமிழ், ஆங்கிலம் மற்றும் முதுகலை தமிழ், ஆங்கில தேர்வுகள் நடந்தன. இதேபோல் 2ம் நாளான இன்றும், பயிற்சி நிலைய வரிசைப்படி தேர்வுகள் நடக்கிறது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்