நண்பரின் காரை அடமானம் வைத்த தம்பதி மீது வழக்கு

சேலம், பிப்.25: சேலம் அழகாபுரம் அத்வைத ஆசிரம ரோட்டை சேர்ந்தவர் ரகமத்துல்லா(65). இவரும் சூரமங்கலம் ரயில் நகரை சேர்ந்த சுப்பிரமணியும் நண்பர்கள். ரகமத்துல்லாவின் காரை சுப்பிரமணி வாடகைக்கு வாங்கியிருந்தார். மீண்டும் அவர் காரை கேட்டபோது சுப்பிரமணி சென்னையில் காரை அடமானம் வைத்திருப்பது தெரிந்தது. இதுபற்றி அவரிடம் விசாரித்தபோது ரகமத்துல்லாவை சுப்பிரமணி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி அன்பரசி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு