பண மோசடி வழக்கு ஜார்க்கண்டில் இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் கைது: அமலாக்கத்துறை அதிரடி

ராஞ்சி: சட்ட விரோத பண மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட் ஐஏஎஸ் அதிகாரியான சாவி ரஞ்சன் ராஞ்சி மாவட்ட துணை கமிஷனராக இருந்த போது பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலங்கள் முறைகேடாக தனிநபர்களுக்கு விற்கப்பட்டது. இது சம்மந்தமான வழக்கில் சாவி ரஞ்சனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி பல இடங்களில் சோதனையும் நடந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேரை அமலாக்க துறை கைது செய்துள்ளது.

Related posts

மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அமித்ஷா நாளை மதுரை வருகை

தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்