குஜராத்தில் மோடி படித்த பள்ளிக்கு 7 நாள் சுற்றுலா: போர்ட்டல் தொடக்கம்

புதுடெல்லி: குஜராத்தின் வாட்நகர் நகரில் பிரதமர் மோடி படித்த பள்ளிக்கு சுற்றுலா செல்ல நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்.
அங்கு செல்ல விண்ணப்பிக்க ஒன்றிய கல்வி அமைச்சகம் சார்பில் ஆன்லைன் போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரமும் 10 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள் உட்பட 20 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவினர் சுற்றுலா செல்ல இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் வாட்நகரில் 1888ல் தொடங்கப்பட்ட வெர்னாகுலர் பள்ளியில் பிரதமர் மோடி படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்

3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை: 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு