5 வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் உள்ளூர்வாசிகள் 3 பேரின் சடலம் மீட்பு: பூஞ்ச் ​​பகுதியில் ராணுவம் உஷார்

பூஞ்ச்: சமீபத்தில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், பூஞ்ச் பகுதியின் குறிப்பிட்ட இடத்தில் உள்ளூர்வாசிகள் 3 பேரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் இரண்டு வீரர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டதால், அங்கே பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது. இதற்கிடையே சந்தேகத்திற்கிடமான முறையில் 3 பேரின் உடல்கள் குறிப்பிட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், ‘சுரன்கோட் காவல் நிலையத்திற்குட்பட்ட தாத்யார் மோர் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளை கண்டுபிடிக்க அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தேசிய புலனாய்வு முகமை குழுவும், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பார்வையிட்டது. இந்நிலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் டோபா பீர் கிராமத்தில் வசிக்கும் சஃபிர் உசேன் (43), முகமது ஷோகெத் (27), ஷபீர் அகமது (32) ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தற்போது அவர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றன.

Related posts

பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம்