300 நீண்ட கால சிறைவாசிகள் விவகாரம் விடுதலை மனுவை ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார்: அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு

சென்னை: புழல் மத்திய விசாரணை சிறையில் உள்ள கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் அம்ரேஷ் புஜாரி தலைமை தாங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சியை தொடங்கி வைத்து, கைப்பந்து போன்ற பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். சிறை காவலர்களுக்கான மின் மிதிவண்டிகளை வழங்கினார். விழாவில், சட்டம் நீதி மற்றும் சிறைகள் சீர்திருத்த பணிகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விரிவாக்கப்பட்ட சிறை நூலகத்தை திறந்து வைத்தார்.

பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கைதிகளுக்கு இசைக்கருவிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‘‘நீண்ட கால சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக, 560 மனுக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் 300 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் மனுக்கள் அனுப்பப்பட்டு ஆளுநரிடம் கிடப்பில் உள்ளது.என்றார். நிகழ்ச்சியில், மாதவரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.சுதர்சனம், சிறை துறை துணைத் தலைவர்கள் கனகராஜ், முருகேசன், கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் மற்றும் சிறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி: இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஜூன் 5ல் வெளியே வருவேன்

பிரதமர் மோடி ஜெயித்தால் அடுத்து தேர்தலே இருக்காது: கார்கே கணிப்பு

எனது குடும்பம் மக்களுக்காக உழைக்கிறது அம்பானி, அதானிக்காக மோடி உழைக்கிறார்: ராகுல் காந்தி பிரசாரம்