300 ஆண்டு பழமையான அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

 

பரமக்குடி, ஜூன் 5: வாழவந்தான் அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பரமக்குடி அருகே நெல்மடூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான வாழவந்தான் அம்மன் ஆலயம் உள்ளது. நெல்மடூர் கிராம கண்மாய் கரையில் இக்கோவில் அமைந்துள்ளதால் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்டவற்றைக் இக்கோயிலில் படைத்து சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மிகவும் பழமையான இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, ஜூன் 1ம் தேதி முதலாம் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் பூஜை, புண்யாக வஜனம், வாஸ்து பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை வாழவந்தான் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேதங்கள் முழங்க புனிதநீர் கொண்டு வரப்பட்டு கலசத்தில் ஊற்றப்பட்டது.

300 ஆண்டுகள் பழமையான வாழவந்தான் அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் குடிமக்கள் மற்றும் நெல்மடூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related posts

பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார் மோதி பெண் படுகாயம்: சிசிடிவி காட்சிகள் வைரல்

குடியாத்தத்தில் முகமூடி அணிந்து பேராசிரியையிடம் செயின் பறித்த 3 வாலிபர்கள் கைது

10 இடங்களில் நாளை வருங்கால வைப்புநிதி குறைதீர்வு கூட்டம் அதிகாரிகள் தகவல்