சோழந்தூர் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரத்தால் பாதிப்பு: பொதுமக்கள் புகார்

 

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 5: சோழந்தூர் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் மின் சாதனப் பொருட்கள் சேதமடைவதாகவும் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சோழந்தூர் கிராமத்தில் சீரான மின்சார சப்ளை வராததால் குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீடுகள், மற்றும் கடைகளில் பயன்படுத்தக்கூடிய பேன், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஸ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு விடுகிறது.

இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறுவதோடு இது சம்மந்தமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சீர் செய்யவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதிக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்திட சம்மந்தப்பட்ட துறையின் மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்