17 வயது சிறுமியை கடத்தி திருமணம்: தாய், பெரியப்பா, வாலிபர் கைது

ஊத்தங்கரை: சிறுமியை கடத்தி திருமணம் செய்து, மணக்கோலத்தில் இருந்த புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் பூவரசன் (18), டெம்போ டிரைவர். இவர் சாமல்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக, சிறுமியின் பெற்றோர் சாமல்பட்டி போலீசில் கடந்த 24ம் தேதி புகார் அளித்தனர். இதன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பூவரசன் சிறுமியை ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு, மாலை அணிந்தபடி மணக்கோலத்தில் உள்ள படம், வாட்ஸ் அப்பில் வெளியாகி வைரலானது. இதனை கண்டு ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள், கடந்த 27ம் தேதி மாலை, சாமல்பட்டி காவல் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சாமல்பட்டி போலீசார், சிறுமியை கடத்திச் சென்ற பூவரசன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் ஆனந்தி, பூவரசனின் பெரியப்பா ராஜா ஆகியோரை போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி