12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவர்களுக்கு டிடிவி தினகரன் பாராட்டு

சென்னை: அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். http://tnresults.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம்.மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; தமிழகத்தில் இன்று வெளியாகியிருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்று வாழ்க்கையின் அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட மாணவ, மாணவியர்கள் தேர்வின் முடிவுகளை வாழ்க்கையின் மதிப்பீடுகளாக கருதாமல், விரைவில் நடைபெற இருக்கும் துணைத்தேர்வுகளை மனம் தளராமல் எதிர்கொண்டு, வெற்றிபெற்று வருங்காலத்தில் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரதமர் நரேந்திர மோடியின் ‘முஜ்ரா’ பேச்சு: தலைவர்கள் கடும் கண்டனம்

9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்

மே-27: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை