114 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

சேந்தமங்கலம், செப்.14: எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 114 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை பொன்னுசாமி எம்எல்ஏ வழங்கினார். எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் 10,12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பழனியாண்டி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வடிவழகன் வரவேற்று பேசினார்.இதில் சேந்தமங்கலம் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு 114 மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள், கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ₹7 ஆயிரமும், 2ம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ₹5 ஆயிரமும், 3ம்மதிப்பெண் பெற்றவர்களுக்கு ₹3 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகையை ஒன்றிய திமுக மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து மாணவிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பொன்னுமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், திமுக நிர்வாகிகள் வார்டு கவுன்சிலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்