நாகப்பட்டினம்: சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு திருவிழா நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்தது.
நாகப்பட்டினம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசியதாவது: சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உணவு திருவிழா மாவட்ட அளவில் நடந்தது. இதில் ஏற்கனவே வட்டார அளவில் ஊட்டச்சத்து உணவு போட்டி நடத்தப்பட்டு அப்போட்டியில் முதல் இரண்டு இடம் பிடித்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்றுள்ளனர். பல்வேறு வகையான சத்தான உணவு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கம் அளித்துள்னர்.

சிறுதானியங்களை கொண்டு சுவையாக, சுகாதாரமாக சமைத்துள்ளனர். மாவட்ட அளவிலான இப்போட்டியில் சுய உதவிக் குழுக்கள் காட்சிப்படுத்தியிருந்த உணவு பொருட்களை மதிப்பீடு செய்ய நடுவர்களாக மாவட்ட சமுக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் செயல்பட்டனர். இந்த நடுவர்கள் மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

மகளிர் திட்டம் மூலம் ஆண்டு தோறும் வழங்கப்படும் மணிமேகலை விருது சிறந்த மக்கள் அமைப்புகளான வறுமை ஓழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதியளவிலான கூட்டமைப்பு நகர்புறம் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு விருதுகளையும், நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பல்வேறு சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பெண்கள் முன்னேற்றம் குறித்த கவிதை, கட்டுரை மற்றும் பாட்டு போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மகளிருக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது என்றார். இதை தொடர்ந்து பரிசுகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார். மகளிர் திட்ட, திட்ட இயக்குநர் முருகேசன், உதவி திட்ட அலுவலர் சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் நகர்புறம் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்

மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பத்தாம்பட்டி நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும்

தாந்தோணிமலையில் சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு