10ம் வகுப்பு தேர்வில் தோல்வி காரணமாக மகன் மாயம்: காவல் நிலையத்தில் தந்தை புகார்

திருவள்ளூர்: திருவள்ளுர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். கூலித் தொழிலாளியான இவரது மகன் அரவிந்குமார்(15). பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த பத்தாம் தேதி காலை வெளியாக இருந்த நிலையில், தந்தையை பார்ப்பதற்காக சென்னைக்கு செல்ல வேண்டுமென கூறிவிட்டு தாயிடம் 50 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு 10ம் தேதி காலை சென்ற மகன் வீடு திரும்பவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரவிந்த் குமார் தோல்வி அடைந்ததால் வீட்டில் பெற்றோர்கள் திட்டுவார்கள் என நினைத்து வீட்டிற்கு வராமல் தலைமறைவாக உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் தந்தையை பார்ப்பதற்காக தான் மகன் சென்றிருக்கிறான் என்று தாய் நினைத்துக் கொண்டிருந்தார். இதனிடையே நேற்று திடீரென தந்தை பரசுராமன் வீட்டிற்கு வந்தபோது மகன் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூலி வேலைக்காக சென்னைக்கு சென்றிருந்த நேரத்தில் தந்தையை பார்ப்பதற்காக செல்வதாக தாயிடம் கூறிவிட்டு சென்றதால் தேடாமல் இருந்ததாகவும் மகன் வீட்டில் இல்லாததாலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தாலும் வீட்டில் பெற்றோர்கள் திட்டுவார்கள் என நினைத்து மகன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பரசுராமன் மணவாள நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு