ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்


பெரம்பூர்: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிழக்கு மண்டல இணை ஆணையரின் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு அயனாவரம் கே.கே.நகர் மைதானம் அருகே சந்தேகத்தின் பேரில் லாரி ஒன்றை அயனாவரம் போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அந்த லாரியில் 5 பண்டல்களில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த ஆவடி பாரதி நகரை சேர்ந்த சதீஷை (37) கைது செய்தனர்.

விசாரணையில் இவர், பூந்தமல்லியை சேர்ந்த சவுந்தரராஜனிடம் லாரி டிரைவராக வேலை செய்து வருவதும், இவர் தனது உறவினரான சூர்யா என்பவரிடம் ஆந்திராவிற்கு லாரியில் லோடு ஏற்றி சென்று விட்டு திரும்பி வரும்போது ஆந்திர மாநிலம் இச்சாபுரம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சதீஷை சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய சூர்யா, ஆல்பர்ட், ராமு ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?